தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்தது - நகை வாங்குவோர் மகிழ்ச்சி!
Public
Happy
Gold Price
By Thahir
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து 4,380 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.35,040க்கு விற்பனையாகிறது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,208க்கு குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,000க்கும் விற்பனையாகிறது.