ஒரே நாளில் தங்கவிலை இவ்வளவு குறைவா - எவ்வளவு தெரியுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து சவரன் ரூ.39,008 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதிரடி சரிவு
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு உண்டான தொழில்துறை தேக்கத்தின் காரணமாக முதலீட்டாளர்கள் பலர் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் கவனத்தை திருப்பினர். ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, அமெரிக்க டாலர்கள் போன்றவற்றிலுள்ள முதலீடுகளை தங்கத்தின் மீது திரும்பினர்.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்த நிலையில் அவ்வப்போது தங்கத்தின் விலை ஏற்ற இரக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது.
தங்க விலை
அதன்படி, ஒரு சவரண் ஆபரண தங்கத்தின் விலை 304 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 39,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று ஒரு கிராம் தங்கம் 4,914 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்
இன்று 38 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 4,876 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
வெள்ளி கிராமுக்கும் 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 63 ரூபாய் 80 பைசாவாகவும், கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து 63,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.