சரமாரியாக குறைந்த வேகத்தில்.. திடீர் தங்கம் விலை உயர்வு - என்ன காரணம்?
தங்கம் விலை குறைந்த நிலையில் திடீரென விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
ஈரான் தலைநகர் தெஹ்ரான்-ல் பாலஸ்தீன கிளர்ச்சி குழுவான ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளார்.
இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில், மத்திய கிழக்கு சந்தையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
மத்திய கிழக்கில் மேலும் அதிகரிக்கும் பதற்றம்..வெடிக்கும் உலகம் தழுவிய போர்!! இந்தியா அரசு எச்சரிக்கை
திடீர் உயர்வு
இதற்கிடையில், அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்துள்ளது. இது தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது. தங்கம் விலை உயர்வு போலவே கச்சா எண்ணெய் விலையும் இன்று அதிகப்படியான அளவுக்கு அதிகரித்துள்ளது.
தங்கத்தில் ஏற்றப்பட்டு வந்த தொடர் சரிவு இனி தடை பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தங்கம் விலை கிராம் ரூ.6,420க்கும், சவரன் ரூ.51,360க்கும் விற்பனையாகிறது.