சுரங்கம் இடிந்து விழுந்து 70 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்த சோகம்!
தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுரங்க விபத்து
மாலி, கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. ஆப்பிரிக்காவின் தங்க உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், இந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், உள்ளே இருந்த அனைவரும் மண்ணில் புதைந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் வந்து சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
70 பேர் பலி
இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தேவை அதிகரித்துள்ளதால் பழைய மற்றும் கைவிடப்பட்டப்பட்ட சுரங்கங்களில் பணிகள் நடைபெற்று வருவதால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.