பழைய ஹால்மார்க்; என்ன செய்ய வேண்டும் - மத்திய அரசு முக்கிய தகவல்!

India Gold
By Sumathi Apr 02, 2023 03:55 AM GMT
Report

பழைய ஹால்மார்க் நடைமுறைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகள்

தங்க நகைகளை விற்கும்போது அதில் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நகையின் தரம், விற்பனை தொடர்பான விவரங்களை வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள முடியும்.

பழைய ஹால்மார்க்; என்ன செய்ய வேண்டும் - மத்திய அரசு முக்கிய தகவல்! | Gold Jewellery With 6Digit Huid Number

நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படாத பழைய ஹால்மார்க் நகைகள் இருப்பின், அவற்றில் மறுமுத்திரை பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கையிருப்பில் உள்ள நகைகளை விற்பனை செய்யும் வகையில்,

 ஹால்மாக் 

பழைய ஹால்மாக் நடைமுறைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க நகைக்கடை உரிமையாளர்கள், நகை விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, பழைய நடைமுறையில், நகைக்கடை உரிமையாளர்கள் நகைகளை விற்பனை செய்ய ஏதுவாக,

ஏற்கெனவே அனுமதி பெற்ற 16 ஆயிரம் நகைக்கடை உரிமையாளர்களுக்கு மட்டும் கால அவகாசத்தை ஜூன் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஹால்மார்க் மையங்களில் ரூ.200 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்துகொள்ளலாம்.

ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்றால் அதன் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.