உதய் மாமா..ஸ்டாலின் தாத்தா வாழ்த்து - துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அமைச்சர் மகள்!
66வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகள் நிலா ராஜா தங்கம் வென்றுள்ளார்.
நிலா ராஜா
66வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில், ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகள் 'நிலா ராஜா' பங்கேற்று தங்கம் வென்று அசத்தினார்.
இவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலுவின் பேத்தியும் ஆவார். இந்நிலையில் தங்கம் வென்று சென்னை திரும்பிய நிலா ராஜாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது மகள் நிலாவை வரவேற்றார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் நிலா ராஜா பேசியதாவது "தமிழ்நாட்டிற்கு முடல் முறையாக பதக்கம் வென்ற போது மிகவும் பெருமையாக இருந்தது.
பேட்டி
அதே போன்று இரண்டாவது முறையும் பதக்கம் வென்றதில் மிக பெருமையாக உள்ளது. அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் போட்டியில் வெற்றி பெற்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாத்தா என்னை அழைத்து வாழ்த்து கூறினார்.
உதய் மாமாவும் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறினார். சர்வதேச அளவில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் தமிழ்நாட்டில் கட்டி தருவதாக உதய் மாமா கூறினார். அது கூடிய விரைவில் தமிழ்நாட்டிற்கு வரும்.
வந்த பிறகு சர்வதேச போட்டிகளும் இங்கு நடைபெறும் என்று மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து விளையாட்டுகளிலும் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் விளையாடி வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என நிலா ராஜா தெரிவித்துள்ளார்.