நம்ம ஜெயிசிட்டோம் தாத்தா - டி.ஆர்.பி. ராஜா மகிழ்ச்சி!

politics
By Nandhini May 04, 2021 04:57 AM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக தற்போது ஆளும் கட்சியாக உயர்ந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு பரிசாக தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். மு.க. ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்றத்தில் பல இளம் வேட்பாளர்களும், எம்.எல்.ஏ.க்கள் ஆக பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்நிலையில், டி.ஆர்.பாலுவின் மகனான டி.ஆர்.பி. ராஜாவுக்கு கடந்த முறை மன்னார்குடியில் வெற்றி பெற்று சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் நிலையில், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

இதனையடுத்து, மன்னார்குடியில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழுடன் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற டி.ஆர்.பி.ராஜா, கருணாநிதியிடம் திருவுருவ படத்திற்கு முத்தமிட்டு வணங்கினார்.

இதனையடுத்து, அவருடைய டுவிட்டர் பக்கத்தில், நம்ம ஜெயிசிட்டோம் தாத்தா என்று பதிவிட்டுள்ளார்.