Gold Rate Today: எகிறிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ. 5,700 ஆகவும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ. 45,600 ஆகவும் உள்ளது.
18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ரூ. 4,669 ஆகவும், சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.37,056 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ரூ.88 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.