அடேங்கப்பா.. தொடர் உச்சத்தில் தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (செப்.27) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56,800க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.102 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000க்கும் விற்பனையாகிறது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
