தங்கம் விலை எப்போது குறையும்? ஆண்டு இறுதிக்குள் ரூ.60,000-ஐ தொடும்!
தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (செப்.26) விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.
எப்போது குறையும்?
அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.7,060 -க்கும், சவரன் ரூ.480 ரூ.56,480க்கும், விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.60,000-ஐ தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.