விநாயகர் சதுர்த்தி; எகிறிய தங்கம் விலை - எவ்வளவுன்னு தெரிஞ்சுகோங்க!

Today Gold Price
By Sumathi Sep 18, 2023 05:30 AM GMT
Report

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை 

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி; எகிறிய தங்கம் விலை - எவ்வளவுன்னு தெரிஞ்சுகோங்க! | Gold And Silver Price On 18 September

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், பண்டிகை நாளான இன்று விலை அதிகரித்துள்ளது.

உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.44,320-க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிராம் வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து ரூ.78-க்கும், கிலோ ரூ.200 குறைந்து ரூ.78000-க்கும் விற்பனையாகிறது.