தங்கத்தட்டில் பானிபூரி; உள்ளே என்ன இருக்கு தெரியுமா? ஆர்வத்தில் பிரியர்கள்!
தங்கத்தட்டில் பரிமாறப்படும் புதிய வகை பானிபூரி கவனம் ஈர்த்துள்ளது.
பானிபூரி
வட இந்திய உணவான பானிபூரி பிரதான ஸ்நாக்ஸாக பார்க்கப்படுகிறது. தெருவோரங்களில் நம்மூர்க்காரர்கள் வடைக்கடை போட்டு விற்பனை செய்துவந்த காலம் மாறி, பானிபூரி கடைகள் ஆக்கிரமித்துவிட்டன.
அந்த வரிசையில், குஜராத்தின் அகமதாபாத் பகுதியில் தெருவோர பானிபூரி உணவகமொன்று பிரபலமாகியுள்ளது. அதன் விற்பனையாளர் பானிபூரியின் புதிய வகை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.
புதிய வகை அறிமுகம்
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பானிபூரி பறிமாறப்படுகிறது. அதோடு துருவிய பாதாம் மற்றும் தண்டாய் ஆகிய கலவை சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், 6 பானிபூரிகள் தட்டில் உள்ளது. ஒவ்வொரு பானிபூரியிலும் துண்டாக்கப்பட்ட பாதாம் மற்றும் சில முழு முந்திரி மற்றும் பிஸ்தா சேர்க்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர் அதில் தேனையும் மிக்ஸ் செய்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.