பானிபூரி விற்பனைக்கு தடை போட்ட நேபாளம் : காரணம் என்ன?

Nepal
By Irumporai Jun 29, 2022 01:25 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நொருக்கு தீனி வகைகளில் பானிபூரி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மாலை வேலைகளில் ஏராளமானோர் பானி பூரி கடைகளுக்கு படையெடுப்பது அதிகரித்து வரும் நிலையில், நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான பானிபூரி விற்பனை கடைகள் உள்ளன. இங்கு அச்சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் லலித்பூர் பகுதியில் காலாரா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

பானிபூரி விற்பனைக்கு தடை போட்ட நேபாளம் : காரணம் என்ன? | Pani Puri Has Been Banned In Nepal

கடந்த 19ந் தேதி ஒருவருக்கு காலார பாதிப்பு நோய் ஏற்பட்ட நிலையில், தற்போது 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் எட்டு பேர் குணமடைந்த வீடு திரும்பினர்

படையெடுக்கும் காலரா

மேலும் நான்கு பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாக்பஜாரில் இருவர் காலராவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஒருவாரம் பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் முடிவு செய்தனர். எனினும் இதற்கு உணவு பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பானிபூரிக்கு தடை

பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு முற்றிலும் பொருத்தமற்றது என்றும், இது சிறு வணிகம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனறும், அதற்கு பதில் சுகாதாரமான தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

முன்னதாக நேபாளம் முழுவதும் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் காரணமாக 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வரையில் 911 பேர் சுகாதார சீர்கேட்டால் இறந்துள்ளனர்.