கடைசி வீடியோ இது தான் - சாக போறோம்...சீமான் தான் காரணம் - விஜயலக்ஷ்மி பகிர்..!
தொடர்ந்து நாம் தமிழர் சீமான் மீது குற்றம்சாட்டி வரும் விஜயலக்ஷ்மி தற்போது மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
விஜயலக்ஷ்மி வீடியோ
இது குறித்து அவர் அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோவில், இதுதான் கடைசி வீடியோ என குறிப்பிட்டு, சாவை நோக்கி தான் பயணம் உள்ளது என தெரிவித்து தானும் எனது அக்காவையும் கூட்டிக்கொண்டு சாகப்போகிறேன் என தெரிவித்துள்ளார்.
2011-ல் தான் இந்த வழக்கை தொடுத்த போது அப்போதே, தன்னை அச்சுறுத்தி, தொந்தரவு செய்து, விசாரணையை தடுத்தனர் என கூறிய விஜயலக்ஷ்மி, 12 வருடங்களுக்கு பிறகு தற்போதும் அதையே தான் செய்கின்றனர் என குற்றம்சாட்டினார்.
இது தான் கடைசி வீடியோ
தன் மீது மான நஷ்ட வழக்கு போடப்போவதாக டார்ச்சர் செய்கின்றனர் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ள விஜயலக்ஸ்மி, தங்களை யாரும் வாழ விடமாட்டார்கள் என கூறி தங்கள் சாவிற்கு சீமானும், நாம் தமிழர் கட்சியும் தான் காரணம் என்றும் இதன் பிறகு சீமானை கைது செய்யுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
? #BreakingNews
— Raj ✨ (@thisisRaj_) September 22, 2023
என் சாவுக்கு சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் தான் காரணம்.
தனக்கும் தன் அக்காவிற்கு எதுவும் நேரிட்டால் சீமானை கைது செய்யுமாறு விஜயலட்சுமி தனது கடைசி வீடியோவில் கோரிக்கை வைத்துள்ளார். #Seeman #NTK #Vijayalakshmi pic.twitter.com/KslFcdFUGo
இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், உண்மையில் விஜயலக்ஷ்மி எங்கிருக்கிறார் என்ற தேடல்கள் வேகமெடுத்துள்ளன. முன்னதாக, அந்த வீடியோவில் இதுவே தங்களின் கடைசி வீடியோ என்றும் தங்களின் இந்த முடிவிற்கு தான் சீமானும் எதிர்பார்த்தார் என விஜயலக்ஷ்மி தெரிவித்தார்.