இதோட நிறுத்திக்கோங்க..இல்லனா -சீமானுக்கு மீண்டும் விஜயலக்ஷ்மி எச்சரிக்கை!!
சீமான் மீது தான் அளித்திருந்த வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், தொடர்ந்து சீமான் மீது விமர்சனம் வைத்து நடிகை விஜயலக்ஷ்மி வீடியோ வெளியிட்டு வருகின்றார்.
சீமான் விஜயலக்ஷ்மி விவகாரம்
தன்னை ஏமாற்றி 7 முறை கருக்கலைப்பு செய்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலக்ஷ்மி வழக்கு தொடுத்தார். இதனை தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடந்தேற திடீரென தனது வழக்கை வாபஸ் பெற்று பெங்களூரு திரும்பினார் விஜயலக்ஷ்மி.
இருப்பினும் இது தொடர்ந்து நடிகை விஜயலக்ஷ்மி - அவருக்கு ஆதரவாக செயல்பட்ட வீரலட்சுமி மற்றும் நாம் தமிழர் சார்பில் தாங்கள் பக்க நியாயங்களை கூறி செய்தியாளர்கள் சந்திப்பும், வீடியோக்களும் வெளியிடப்பட்டது.
சீமானுக்கு எச்சரிக்கை
இந்நிலையில், தற்போது மீண்டும் நடிகை விஜயலக்ஷ்மி வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் தமிழர் சீமானை மிரட்டியுள்ளார்.அந்த வீடியோவில், தான் மீது சீமான் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தன்னையும் தன்னுடைய அக்காவின் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளவும் தான் மட்டுமே இருப்பதாக கூறி, பெருந்தன்மையாக தான் சீமானிடம் விட்டுக்கொடுத்து வந்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும், தனக்கு கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஜக்கேஷ் என்ற நடிகருடன் திருமணமானதாக கூறும் சீமான் மீது, தான் மட்டுமின்றி நடிகர் ஜக்கேஷ்ஷுடன் இணைந்து ஆளுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடருவோம் என எச்சரித்துள்ளார்.