'கோ பேக் ராகுல்' மக்கள் கோஷம் - அமெரிக்காவில் கிளம்பிய திடீர் எதிர்ப்பு!
காங்கிரஸ் தலைவர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் திடீரென மக்கள் கோஷம் போட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா பயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, 10 நாட்கள் அமெரிக்காவிற்கு பயணம் சென்றுள்ளார்.
அங்கு உள்ள சான்பிரான் சிஸ்கோ, வாஷிங்டன், நியூயார்க் ஆகிய 3 நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.
முதலில் சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டனில் பகுதிகளில் நிகழ்ச்சிகளை அவர் முடித்துவிட்டார்.
தொடர்ந்து இவர் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
எதிர்ப்பு
இந்நிலையில், நிகழ்ச்சிக்கு சென்ற ராகுல் காந்தியை வரவேற்பதற்காக ஏராளமான மக்கள் நின்றுகொண்டிருந்தனர்.
அப்பொழுது, சாலையோரம் வரிசையாக நின்று கொண்டிருந்த சீக்கியர்கள் சிலர் 'கோ பேக் ராகுல்' என எழுதப்பட்ட போஸ்டர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள், பஞ்சாப்பை தனி நாடாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்து வரும் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் என்பதும்,
1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுலை கண்டித்து போராட்டம் நடத்தியதும் தெரியவந்தது.