பக்ரீத் பண்டிகையொட்டி ஆட்டுச் சந்தையில் 5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்..!
வாணியம்பாடி அருகே பக்ரீத் பண்டகை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் ரூபாய் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனது.
5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்
திருப்பதூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் நேற்று ஆட்டு சந்தை நடைபெறது. நாளை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்த பண்டிகையில் இசுலாமியர்கள் ஆடு மாடுகள் வாங்கி குர்பானி கொடுப்பது வழக்கம். இதனால் சந்தையில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கூடுதலாக சுமார் 5 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடுகளை வாங்க இஸ்லாமியர்கள் மற்றும் விவசாயிகள் குவிந்தனர்.
நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.