நெருங்கும் பக்ரீத் பண்டிகை...3 மணி நேரத்தில் 4 கோடிக்கு விற்பனையான ஆடுகள்..!

Eid-al-Adha Kallakurichi
By Thahir Jun 21, 2023 03:14 AM GMT
Report

பக்ரீத் பண்டிகையொட்டி உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் 3 மணி நேரத்தில் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

களைகட்டிய வார சந்தை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

இந்த வார சந்தைக்கு காட்டுசெல்லூர் வட குரும்பூர் கிளியூர் மடப்பட்டு சேந்தநாடு ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

Goats sold for 4 crores

வழக்கமாக இந்த சந்தையில் சுமார் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடைபெறும் இந்த நிலையில் அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.

4 கோடிக்கு ஆடுகள் விற்பனை 

காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திண்டுக்கல் மதுரை திருச்சி வேலூர் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்.

Goats sold for 4 crores

8000 முதல் 35 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையான நிலையில் சுமார் 3 மணி நேரத்தில் ஆடுகள் 4 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்