100 கிலோ கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்.. தலைக்கேறிய போதையில் என்ன செய்தது தெரியுமா? - ஷாக்!
ஆடுகள் கஞ்சா செடியை மேய்ந்துவிட்டு செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா செடி
கிரீஸ் நாட்டில், 2017-ம் ஆண்டு முதல் மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை வளர்ப்பதற்கான சட்டபூர்வ அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. கஞ்சாவை உட்கொள்வது விலங்குகளுக்கும் ஆபத்தானதுதான். தொடர்ச்சியாக இந்நாட்டில் நாய்கள் கஞ்சாவின் விஷத்தன்மையால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
கிரீஸ், லிபியா, துருக்கி மற்றும் பல்கேரியாவை தாக்கிய வெள்ளத்தில், டேனியல் புயலும் தாக்கவே ஆடுகளையும் வெளியே மேய விடாமல் உள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். கடும் பசியில் சுற்றித் திரிந்த ஆட்டு மந்தை மருத்துவ காரணங்களுக்காகப் பயிரிடப்பட்ட இந்த சுமார் 100 கிலோ கஞ்சாவைச் சாப்பிட்டுள்ளது.
என்ன செய்தது?
இந்நிலையில், அந்த ஆட்டு மந்தை மத்திய கிரீஸின் தெசலி பகுதியில் அல்மிரோஸ் நகருக்கு அருகில் ஒரு இடத்தில் மருத்துவ காரணங்களுக்காக க்ரீன் ஹவுஸில் இந்த கஞ்சா செடி வளர்க்கப்பட்டது. அதனை தின்றுவிட்டு திடீர் திடீரென எழும்பிக் குதித்த ஆடுகள், டான்ஸ் ஆடுவது போல நடப்பது, விடாமல் எதாவது ஒலி எழுப்புவது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறது.
அதன் பின்னரே அந்த உரிமையாளருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக கஞ்சா செடிகள் வளர்க்கப்படும் தோட்டத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கே சுமார் 100 கிலோ கஞ்சா செடிகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் , "இதற்கு அழுவதா சிரிப்பதே என்றே தெரியவில்லை. வெப்ப அலை அதிகமாக இருக்கும் சமயத்தில் எங்களுக்கு விளைச்சல் இருக்காது.
அதேபோல வெள்ளம் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்கும். இப்போது புதுவித பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்டு மந்தையால் பெரும்பகுதியை இழந்துள்ளேன். என்ன செய்வது என ஒன்றும் புரியவில்லை" என்று கூறியுள்ளார்.