ஆட்டின் உடலில் பிறை குறியும், உருது எழுத்தும்.. எவ்வளவுக்கு விற்பனை ஆச்சு தெரியுமா?
உடலில் பிறை குறியுடன் உள்ள ஆடு கவனம் பெற்றுள்ளது.
கால்நடை சந்தை
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் வாகித் உசேன். இவர் பண்டிகையையொட்டி தான் வளர்த்த ஆட்டினை சந்தைக்கு அப்போது கொண்டுவந்திருந்தார். அந்த ஆட்டுக்கு 7 லட்சம் விலையை நிர்ணயம் செய்திருந்துள்ளார்.
தன்னுடைய ஆடு கலப்பில்லாத ஆடு இனத்தை சேர்ந்தது, ஆட்டின் உடலில் உள்ள வண்ணங்களில் உருது எழுத்துக்கள் போன்ற தோற்றம் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து ஒருவர் 22 லட்சம் கொடுத்து அந்த ஆட்டினை வாங்க முன்வந்துள்ளார்.
கவனம் பெற்ற ஆடுகள்
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த உசேன், 7 லட்சத்துக்கு மட்டுமே தன்னுடைய ஆட்டை விற்க வந்திருப்பதாகவும், இந்த ஆட்டை விற்று, தன்னுடைய 3 மகள் கல்யாணத்தையும் நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மால்வாவில் உள்ள சந்தையில்,
சுல்தான் என்ற ஆடு 11 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருந்தது. அதனுடைய உரிமையாளர் ஷாருக்கான், தன்னுடைய ஆட்டின் மீது நபிகள் நாயகமே உருது எழுத்தில் எழுதியிருக்கிறார். 60 கிலோ எடையில் இருக்கும் சுல்தானுக்கு தினமும் முந்திரியும் பாதாமும் கொடுத்து வளர்த்து வருவதாகக் கூறியுள்ளார்.
இதேபோல், ராஜஸ்தான் போபாலில், உடலில் பிறை குறியுடன் உள்ள ஒரு ஆட்டிற்கு, 2 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் கால்நடை சந்தைகளில், இது போன்ற உருவங்களை உடலில் கொண்ட ஆடுகள் பெரும் கவனம் பெற்றது.