2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதே எனது இலக்கு - ஜோ பைடன்

trump United States biden kamala
By Jon Mar 26, 2021 01:38 PM GMT
Report

அமெரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தான் தன்னுடைய இலக்கு என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அமெரிக்காவில் தடுப்பூசி இலக்கு முதல் 100 நாட்களில் 200 மில்லியனை எட்ட முடிவு செய்துள்ளோம்.

2024 இல் மறுதேர்தலுக்கு போட்டியிடுவதே எனது இலக்கு, அதுவே எனது எதிர்பார்ப்பும் கூட. நாங்கள் மோதலை எதிர்பார்க்கவில்லை , என்றாலும் செங்குத்தான போட்டி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும் (சீனாவுடன்). எங்களுக்கு வலுவான போட்டி உள்ளது. சர்வதேச விதிகளின்படி சீனாவை நாங்கள் வலியுறுத்திவோம் என்றார்.