கன்னத்தில் அறைந்த ஆட்டோ ஓட்டுநர்.. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த MLA - நடந்தது என்ன?
ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதில் முன்னாள் எம்.எல்.ஏ. லாவூ மம்லேதர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்
கர்நாடக மாநிலம் பெலகாவிற்கு வேலை நிமித்தமாக கோவா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லாவூ மம்லேதர் (வயது68) சென்றுள்ளார்.அப்போது மதியம் 12 மணியளவில் காதே பஜார் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ மீது உரசிக் கொண்டு சென்றதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முஜாஹித் ஷகில் ஜமாதர் காரை துரத்திக் கொண்டு சென்று வழிமறித்துள்ளார். இதனையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. லாவூ மம்லேதர்வுடன் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், லாவூ, ஆட்டோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
எம்.எல்.ஏ
இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், முன்னாள் எம்.எல்.ஏ. மீது சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த பொது மக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி சாமாதனம் செய்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தான் தங்கியிருந்த ஹோட்டல் படிக்கட்டுகளில் ஏறி உள்ளே சென்ற போது மம்லேதர் சரிந்து விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.