ஜிமெயில் லாகினில் வரும் முக்கிய மாற்றம் - இனி SMS வராது

Google
By Karthikraja Mar 01, 2025 01:16 PM GMT
Report

ஜிமெயில் லாகினில் எஸ்எம்எஸ்க்கு பதிலாக QRCode முறை அமலுக்கு வர உள்ளது.

ஜிமெயில்

டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் முதல் முதியவர் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் ஈ-மெயில் முகவரி வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

gmail login by qrcode

இதில் பெரும்பாலானவர்கள் கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையை தான் பயன்படுத்துகின்றனர். தற்போது சமூக ஊடக பக்கங்கள் மற்றும் ஜிமெயில் கணக்கில் ஹேக் செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் பாதுகாப்பை அதிகரிப்பதில் நிறுவனங்கள் கவனத்தை செலுத்தி வருகிறது. 

கூகிள் விடுத்த முக்கிய எச்சரிக்கை - இதை செய்யலைனா ஜிமெயில் கணக்கு டெலிட் ஆகும்

கூகிள் விடுத்த முக்கிய எச்சரிக்கை - இதை செய்யலைனா ஜிமெயில் கணக்கு டெலிட் ஆகும்

Two Factor Authentication

தற்போது ஜிமெயில் அதன் பாதுகாப்பிற்காக Two Factor Authentication முறையை நடைமுறையில் வந்துள்ளது. இதன்படி ஜிமெயில் கணக்கில் உள்நுழைய பயனர் பெயர் மற்றும் கடவுசொல் உள்ளிட்ட பின், செல்போனுக்கு SMS மூலம் வரும் 6 இலக்க இலக்க சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்ட பின்னரே லாகின் செய்ய முடியும். 

gmail two factor authentication

ஆனால் இந்த முறையிலும் செல்போனுக்கு வரும் SMSஐ இடைமறித்து தெரிந்து கொண்டு அதன் மூலம் ஜிமெயில் கணக்கை ஹேக் செய்கின்றனர். மேலும், இந்த SMS அனுப்புவது கூகிள் நிறுவனத்துக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது.

QR Code முறை

இந்நிலையில் SMS அனுப்பும் முறையை நீக்கி விட்டு அதற்கு பதிலாக QR Code முறையை அறிமுகப்படுத்த கூகிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முறையில், ஜிமெயிலில் லாகின் செய்யும் போது பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்த பிறகு, திரையில் QR Code தோன்றும்.

பயனர்கள் தங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் செயலியைப் பயன்படுத்தி அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் கணக்கை லாகின் செய்ய முடியும். இந்த முறை எஸ்எம்எஸ் முறையை விட பாதுகாப்பானது என்று கூகிள் நிறுவனம் கூறுகிறது. ஒரு சில மாதங்களில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.