இனி கவர்ச்சியாக நடிப்பீர்களா - காஜல் ஓபன் டாக்

Kajal Aggarwal Tamil Cinema
By Sumathi Mar 13, 2023 10:37 AM GMT
Report

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின் நடிப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால்

தமிழ் திரையுலகில் பல பிரபலங்களை அறிமுகப்படுத்திய பாரதிராஜா பொம்மலாட்டம் மூலம் அறிமுகப்படுத்தியவர் தான் காஜல் அகர்வால். இவர் தமிழில் மாரி ,மெர்சல், வலிமை போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இனி கவர்ச்சியாக நடிப்பீர்களா - காஜல் ஓபன் டாக் | Glamour After Marriage Openup Kajal Aggarwal

தற்போது, கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து, தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து 2020ல் திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையும் பெற்று கொண்டார். திருமணம் முடிந்த நிலையிலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கவர்ச்சி?

இந்நிலையில் காஜலிடம், 'திருமணமான நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு "நடிக்க கூடாது என்று எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் நானும், எனது கணவரும் வெளிப்படையாகவே இருக்கிறோம். காதல் காட்சிகள் என்றால் சக நடிகருடன் நான் நெருங்கித்தான் நடிக்க வேண்டும்.

இனி கவர்ச்சியாக நடிப்பீர்களா - காஜல் ஓபன் டாக் | Glamour After Marriage Openup Kajal Aggarwal

அப்படி நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது. திருமண வாழ்க்கையும், செய்யும் தொழிலும் வேறு வேறு. ஆனாலும் கவர்ச்சி காட்சி கதைக்கு தேவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று வதந்தி பரவியது. அதற்கு எனது செயல்கள் மூலம் பதில் அளித்து இருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.