திருமணத்திற்கு பிறகு அசிங்கமாக மாறிய காஜல் அகர்வால் - ரசிகர்கள் அதிர்ச்சி!
திருமணத்திற்கு பிறகு, காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் திரையுலகில் விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
ரசிகர்களுக்கு மட்டும் அல்ல பல ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு பிடித்த நடிகை ஆவார். படப்பிடிப்பு தளத்தில் பந்தா காட்டாமல் இருப்பதால் திரையுலகினர் அவரை பெரிதளவு கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், இவர் கடந்த அக்டோபர் மாதம், அவரது காதலர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அடிக்கடி அவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், தற்போது ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த போட்டோவில் அவர் ஒல்லியாகவு, எலும்பாகவும் தெரிவதால் என்னமா காஜு உடம்புக்கு எதுவும் முடியலையா என ரசிகர்கள் மாறி மாறி கேள்வி எழுப்பி வருகின்றனர்.