நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி - அதிமுகவின் கூட்டணிக்கு செல்லும் த.மா.கா..? திடீர் சந்திப்பு..!
தனித்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் அதிமுகவுடன் த.மா.கா கைகோர்க்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதிமுக - தேர்தல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான புது கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக, பாமக, த.மா.கா போன்ற கட்சிகளின் முடிவு குறித்து தற்போது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
கூட்டணி
அதில், நேற்று த.மா.கவின் தலைவர் ஜி.கே.வாசன் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.