பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.மணி மகன் நியமனம்!

Anbumani Ramadoss Dr. S. Ramadoss Tamil nadu PMK
By Sumathi Oct 23, 2022 02:21 AM GMT
Report

பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.எம் தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜி.கே.எம். தமிழ் குமரன்

பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு காலியானது. இந்த நிலையில், பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகனும்,

பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.மணி மகன் நியமனம்! | Gkm Tamilkumaran Oppoints Pmk Youth Leader

லைகா திரைப்பட நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான தமிழ்க்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி.கே.எம். தமிழ் குமரனுக்கு மருத்துவர் ராமதாஸ் நேரில் நியமன கடிதத்தை வழங்கினார்.

பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி கௌரவ தலைவராகவும், இளைஞர் அணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராகவும் பொறுப்பேற்றிருந்த நிலையில் பாமக இளைஞரணித் தலைவராக தமிழ்க்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.