நடிகராக அறிமுகமான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் - பலரும் அறியாத தகவல்

பாமக anbumaniramadoss drramdoss டாக்டர்ராமதாஸ் paalam பாலம் 32yearsofpaalam
By Petchi Avudaiappan Mar 11, 2022 04:48 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  32 வருடங்களுக்கு முன் படம் ஒன்றில் நடித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? . 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீபகாலமாக ட்விட்டரில் தான் ரசித்து பார்த்த திரைப்படங்கள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால்  பல காலமாக திரைப்படங்களும், திரைப்பட நட்சத்திரங்களும். நடிகர்களால் இந்த நாடு குட்டிச்சுவராகி போனது என்று குற்றம் சாட்டி வந்த அவரே ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்பது பலரும் அறியாத தகவல். 

நடிகராக அறிமுகமான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் - பலரும் அறியாத தகவல் | Paalam Movie Starring Dr Ramdoss

1990 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி  கார்வண்ணன் இயக்கிய பாலம் திரைப்படம் வெளியானது. மேற்கத்திய திரைப்படங்களின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் நான்கு இளைஞர்கள் அமைச்சர் ஒருவரை கடத்தி பாலம் ஒன்றில் பிணைக்கைதியாக வைத்திருப்பதும், போலீஸ் அவரை மீட்க போராடுவதும்தான் படத்தின் கதை.இந்தப் படத்தில் நாயகனாக முரளி நடிக்க போலீஸ் அதிகாரியாக நம்பியார், வில்லனாக முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் தலைவரான பாஸ்கரனும் இடம் பெற்றிருந்தார். 

பாலம் படத்தில் அந்த இளைஞர்கள் செய்த செயல் சரியா, தவறா என்று தொலைக்காட்சியில் முக்கிய தலைவர்களின் கருத்து கேட்பது போல ஒரு காட்சி வரும். அதற்காக சில நிஜமான அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டிருக்கும். படத்தில்  இவர்கள் அனைவரும் தங்களது சொந்த அடையாளத்துடனேயே காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். 

இந்த காட்சியில் ஒவ்வொருவரும் சட்டத்தை கையில் எடுத்தால் நீதிமன்றங்கள் எதற்கு இருக்கிறது என்றும், பாரதியார் பாடல் ஒன்றையும் மேற்கோள் காட்டியும் பேசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.