பெண் பிள்ளைகள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் - விஜயகாந்த் அறிவுறுத்தல்

Vijayakanth Chennai Tamil Nadu Police
By Thahir Oct 15, 2022 11:44 AM GMT
Report

ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை.

விஜயகாந்த் வலியுறுத்தல் 

பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளி இளைஞர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பிள்ளைகள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் - விஜயகாந்த் அறிவுறுத்தல் | Girls Should Be Very Protected Vijayakanth

இந்த நிலையில், இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கல்லூரி மாணவி சத்யபிரியாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

யாரிடமும் இருந்து கொலை மிரட்டல்கள் வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தங்கள் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்பதை பெண் பிள்ளைகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.   

கல்லூரி மாணவிகள் சுவாதி, சுவேதா, சத்யபிரியா ஆகிய மூன்று பேரும் ரயில் நிலையங்களில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதால் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.’ என தெரிவித்துள்ளார்.