சுழலும் ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் முடி - தோலோடு பெயர்ந்து வந்த அவலம்!
ராட்டினத்தில் சிறுமி முடி சிக்கி பெரும் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ராட்டினம்
கண்காட்சி என்றாலே பெரிய ராட்டினங்களில் விளையாடுவது தான் பெரும்பாலோனொர் விரும்புவார்கள். சிறுவர்களும் அதிகம் விளையாடி மகிழ்வதும் அந்த ராட்சத ராட்டினம் தான். அந்த வகையில், மதோனகர், தல்கிராமில் உள்ள கிராமத்தில்
நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் 15 வயது சிறுமி ராட்டினத்தில் ஏறி விளையாடி உள்ளார். திடீரென, சவாரி சுழலத் தொடங்கியபோது, அவர் முடி சிக்கிக்கொண்டது. அலறித் துடித்த சிறுமி, வலியுடன் தவித்த நிலையிலும், ராட்டினம் நிற்கும் வரை அவரது முடி அதிலிருந்து விடுபடவில்லை.
சிறுமி
அதற்குள் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தோலுடன் சேர்த்து தலைமுடி பெயர்ந்து வந்துள்ளது. இந்த விபத்தை கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
முதலில் சிறுமிக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவமறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இது குறித்து பேசிய காவல் அலுவலர், "இந்த சவாரிகளை நடத்தும் அதன் உரிமையாளரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை அறிந்துகொள்ள மேம்பட்ட விசாரணை நடந்து வருகிறது," என்று தெரிவித்துள்ளார்.