பெண்கள் சந்தை; வாடகைக்கு மனைவியை வாங்க குவியும் ஆண்கள் - வினோத கிராமம்!
ஒரு கிராமத்தில் பெண்களை சந்தையில் விற்பனை செய்யும் பழக்கம் இருந்து வருகிறது.
வினோத கிராமம்
மத்தியப் பிரதேசத்தின் உள்ளா ஷிவ்புரி என்னும் கிராமத்தில் புதிய நடைமுறை ஒன்று உள்ளது. அதாவது, இங்குள்ள பெண்கள், சந்தையில் விலைக்கு விற்கப்படுகிறார்கள். இந்த பழக்கத்துக்கு தாடிச்சா "Dhadicha" என்று கூறப்படுகிறது.
ஒரு பொருளை விலைக்கு வாங்குவதைப்போல் இங்கு பெண்கள் சாதாரணமாக வாங்கப்படுகிறார்கள். ஆனால், பெண்களை மொத்தமாக விலைக்கு வாங்காமல், வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் போட்டுக் கொள்கின்றனர்.
இதற்காகவே பலரும் ஆர்வத்துடன், வெகுதொலைவில் இருந்து இந்த சந்தைக்கு வருகிறார்களாம். அதில் குறைந்தது 15,000 ரூபாயிலிருந்து, சிலபல லட்சங்கள் வரை பெண்கள் விலைக்கு விற்கப்படுகிறார்கள். அதிலும், கன்னிப் பெண்களுக்குதான் நிறைய மவுசு இருக்கிறது.
பெண்கள் சந்தை
ஒரு ஆண் ஒரு பெண்ணை ஒரு வருடம் அல்லது சில மாதங்களுக்கு மட்டுமே வாடகைக்கு அழைத்து செல்லலாம் என்ற விதி உள்ளது. இப்படி விற்பனை செய்யப்படும் பெண்ணுக்கும் ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் 10 ரூபாய்க்கு குறைவான விலையில் ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இது போல வாடகைக்கு பெண்களை வாங்குவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன, வீட்டு வேலை செய்வதற்கு, தங்கள் வீடுகளிலுள்ள வயதானவர்களுக்கு சேவை செய்வதற்கு, சிலர் மணமகள் கிடைக்காததால், அதுவரை இப்பெண்களை வாடகைக்கு தங்களுடன் அழைத்து செல்கிறார்கள் என கூறப்படுகிறது.