பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் பெண்கள் விரைவில் வயதுக்கு வருவார்களா?
பிராய்லர் கோழியின் பெயரில் பல செய்திகள் பரப்பப்படுகிறது.
பிராய்லர் கோழி
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண் குழந்தைகள் சீக்கிரத்தில் பூப்பெய்தி விடுவார்கள், தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்துவிடும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ரத்தக்குழாயில் கொழுப்பு அடைத்து விடும் என பல தகவல்கள் உலா வருகிறது.
ஆனால், சராசரி பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது என்பது சராசரியாக 12 முதல் 13-தான். பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களில் உள்ள பெண் பிள்ளைகள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாநிலங்களைவிட சீக்கிரம் பூப்பெய்துகிறார்கள்.
பூப்படைதல் மாற்றம்?
பெண்குழந்தையின் அம்மா, அத்தை, பாட்டி போன்ற வர்கள் சிறுவயதில் பூப்படைந்திருந்தால் அந்த ஜீனை கொண்டு பிறக்கும் இந்த குழந்தை யும் சிறுவயதில் பூப்படைந்து விடுகிறது. உடலில் ஹார்மோன்களின் செயல்பாடு சீராக இல்லாமல் இருக்கும் போது பூப்படைதலை விரைவாக தூண்டிவிடுகிறது.
இருப்பினும், வளர்ச்சி ஊசிகள் ஏற்றப்பட்ட கோழி இறைச்சியின் ருசியில் மயங்கிய பெண் குழந்தைகள் அதை அடிக்கடி சாப்பிடும் போது அவர்கள் உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் என்னும் சுரப்பிலும் அதிகப்படியான மாற்றங்கள் நிகழ்ந்து மிக விரைவில் பூப்படைதலை சந்திக்கிறார்கள்.
எனவே, எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொண்டாலும், அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.