ஒரே ஆர்டரில் 100 பீட்சாக்கள்.. Ex காதலனை பழிவாங்கிய இளம்பெண் - மிரளவைத்த சம்பவம்!
காதலர் தினத்தில் தனது முன்னால் காதலனை இளம்பெண் ஒருவர் வினோதமாக பழிவாங்கியுள்ளார்.
இளம்பெண்
காதலர் தினத்தில் தங்களது காதலை வெளிப்படுத்தப் பரிசுகள், சாக்லேட்டுகள் மற்றும் பூக்கள் கொடுத்து மகிழ்ச்சிப் படுத்துவர்.மேலும் சிலர் ஷாப்பிங், கடற்கரை சென்று நேரம் செலவிடுதல் , சினிமாவிற்கு செல்வர்.
ஆனால் இங்கு இளம்பெண் ஒருவர் முன்னால் காதலனை வெறுப்பேற்றுவதற்கு வினோத செயலை செய்துள்ளார்.இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். ஹரியானா மாநிலம் , குருகிராமை சேர்ந்தவர் 24 வயதான பெண் ஆயுஷி ராவத். இவர் யாஷ் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இவர்களது காதல் முறிந்துள்ளது.இந்த நிலையில் காதலர் தினத்தன்று முன்னாள் காதலன் யாஷை பழிவாங்க நினைத்துள்ளார். இதற்காக ஆயுஷி தனது முன்னாள் காதலனின் வீட்டிற்கு 100 பீட்சாக்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார்.
முன்னாள் காதலன்
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் டெலிவரிக்கு பிறகு யாஷ் பணம் கட்டவேண்டும். இதனையடுத்து வீட்டிற்கு ஆடர் செய்த 100 பீட்சாக்கள் டெலிவரி செய்யப்பட்டதைப் பார்த்த யாஷ் அதிர்ச்சியடைந்தார்.
அப்போது டெலிவரிக்கு பணம் செலுத்தமுடியாமல் டெலிவரி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் காதலன் யாஷ் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்பொழுது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.