காதலனை சூட்கேஸில் அடைத்து கொன்ற காதலி.. வீடியோவில் சிக்கிய ஆதாரம்- என்ன காரணம்?

United States of America World Murder
By Swetha Dec 06, 2024 11:00 AM GMT
Report

காதலனை சூட்கேஸில் அடைத்து காதலி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொன்ற காதலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் சாரா பூன் (47). இவர் தனது ஆசை காதலான ஜார்ஜ் டோரஸ் என்ற நபரை மிகவும் கொடூரமாக கொலை செய்துள்ளார். அதற்காக அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

காதலனை சூட்கேஸில் அடைத்து கொன்ற காதலி.. வீடியோவில் சிக்கிய ஆதாரம்- என்ன காரணம்? | Girlfriend Killed Her Boyfriend In A Suitcase

கடந்த டிசம்- 2ம் தேதி ஆர்லாண்டோவில் உள்ள நீதிமன்ற அறையில் நீதிபதி மைக்கேல் கிரேனிக்-ன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வந்தது. அப்போது வழக்கை மறு விசாரணை செய்யுமாறு பூன் தரப்பு வைத்த கோரிக்கையை நீதிபதி மறுத்துள்ளார்.

கடந்த ஆண்டு 2020ம் ஆண்டு, பூனும் அவரது காதலர் டோரஸும் தங்கள் வின்டர் பார்க் குடியிருப்பில் நன்றாக குடித்துவிட்டு மது போதையில் கண்ணாமூச்சி விளையாடியதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு, பூன், தனது காதலணை சூட்கேஸில் இரவு முழுவதும் அடைத்து வைத்து மூச்சுத்திணற கொன்றுள்ளார்.

அடைப்பதாற்கு முன்பு பேஸ்பால் மட்டையால் கடுமையாக தாக்கியதும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். மறுநாள் சூட்கேஸுக்குள் இருந்த டோரஸிடம் எந்த பதிலும் வராததை அடுத்து உடனடியாக போலீசை வரவழைத்துள்ளார்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், மொபைல் போனில் பூன் எடுத்த வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வீடியோவில் சூட்கேஸுக்குள் சிக்கியிருந்த டோரஸ் உதவிக்காக கெஞ்சுவது வீடியோவில் பதிவாகியது. அவர் மூச்சுத் திணறுவதையும் பூனிடும் கெஞ்சுவதும்,

கண்ணாமூச்சி விளையாட்டில் நடந்த விபரீதம் - காதலனை சூட்கேஸில் அடைத்து கொன்ற பெண்

கண்ணாமூச்சி விளையாட்டில் நடந்த விபரீதம் - காதலனை சூட்கேஸில் அடைத்து கொன்ற பெண்

 என்ன காரணம்?

அதற்கு பூன், “உனக்கு இது தேவைதான்” என கூறுவதையும் கேட்க முடிகிறது. சூட்கேஸிற்கு வெளியே நீண்டு கொண்டிருந்த தனது விரல்களால் டோரஸ் தன்னை விடுவித்திருக்கலாம் என்று பூன் தரப்பினர் கொடுத்த வாக்குமூலத்தை இந்த வீடியோக்கள் காண்பித்துள்ளது.

காதலனை சூட்கேஸில் அடைத்து கொன்ற காதலி.. வீடியோவில் சிக்கிய ஆதாரம்- என்ன காரணம்? | Girlfriend Killed Her Boyfriend In A Suitcase

பூன் டோரஸிடம் பல கொடுமைகளை சந்தித்ததாகவும், தன்னை தற்காத்து கொள்ளவே அவர் இவ்வாறு செய்ததாகவும் பூன் தரப்பு கூறியது. இருப்பினும், இந்த வாதத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லாத காரணதால் நம்ப முடியவில்லை.

இதையடுத்து, பூனிற்கு தண்டனை விதிக்கப்பட்டபோது, டோரஸின் குடும்ப உறுப்பினர்கள் உணர்ச்சிவசப்பட்டதோடு கோபமாக கத்தினர். “அவர் சிறையில் வாடுவதற்கு தகுதியானவரே” என்று கூறியுள்ளனர். இந்த தீர்ப்புக்கு முன் நீதிமன்றத்தில் பேசிய பூன், “நான் கடவுளிடம் மன்னிப்பு கோருகிறேன்.

அவர் சொர்க்கத்தின் வாசலில் என்னைத் தேடுகிறார். அவரிடம் நான் முடிவில்லாமல் எவ்வளவு வருந்துகிறேன் என்பதையும் அதோடு நான் அவரை நேசிப்பதை ஒருபோதும் நிறுத்தபோவதில்லை என்பதையும் அவரிடம் சொல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.