திருமணத்திற்கு மறுத்த காதலன்...அந்தரங்க உறுப்பை சிதைத்த காதலி - அதிர்ச்சி சம்பவம்!
இளைஞரின் அந்தரங்க உறுப்பை அவரது காதலி சிதைத்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
மறுத்த காதலன்..
பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள மரஹவுராவைச் சேர்ந்தவர் விகாஷ் சிங். இவரும் இளம்பெண் ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விகாஷ் சிங்கை அந்த பெண் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
இச்சுழலில் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக அந்த இளம்பெண் காத்திருந்தார். ஆனால், விகாஷ் சிங் அங்கு செல்லவில்லை. இதனால் அந்த இளம்பெண் ஆத்திரமடைந்தார். இதுதொடர்பாக அந்த பெண்ணுக்கும், விகாஷ் சிங்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
மோதல் முற்றியதில் திடீரென விகாஷ் சிங்கின் அந்தரங்க உறுப்பை கத்தியால் அந்த பெண் வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த விகாஷ் சிங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு வருடங்களாக பழகி விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் விகாஷ் சிங்கின் அந்தரங்க உறுப்பை வெட்டியதாக அந்த பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து, விகாஷ் சிங்கின் நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் பாட்னாவில் உள்ள சிருஷ்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.