இருமுறை கருகலைப்பு.. காதலனின் திருமணத்தை தடுக்க வந்த காதலி - போலீசார் செய்த சம்பவம்!

Tamil nadu Chennai Crime Chengalpattu
By Swetha Dec 03, 2024 02:30 PM GMT
Report

தனது காதலனின் திருமணத்தை நிறுத்த வந்த பெண்ணை போலீசார் தடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

காதலன் 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் போன் தயாரிப்பு தொழிற்சாலையில் பிரியதர்ஷினி என்ற பெண் பணி புரிந்து வந்துள்ளார். அதே சமயத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லிஜீன் (27) என்பவரும் அதேபோன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்.

இருமுறை கருகலைப்பு.. காதலனின் திருமணத்தை தடுக்க வந்த காதலி - போலீசார் செய்த சம்பவம்! | Girlfriend Came To Stop Her Boyfriends Marriage

அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டரை ஆண்டு பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், லிஜீனுக்கும் பிரியதர்ஷினிக்கும் கடந்த ஆண்டு நண்பர்கள் முன்னிலையில் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றதாகவும்.

ஒரு வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும், இருமுறை கருகலைப்பு ஏற்பட்டதாகவும் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். இந்த சூழலில், திடீரென லிஜீனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து லிஜீனுக்கு சென்னையில் உள்ள ஒரு தேவாலயத்தில் அந்த பெண்ணுடன் திருமணம் நடைபெறப்போவதாக பிரியதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது. பிறகு உடனே இதை குறித்து போலீசுக்கு பிரியதர்ஷினி புகார் அளித்தார்.

ஆசையாக காதலி வீட்டிற்கு சென்ற காதலன்..தெரியவந்த உண்மை - அடுத்து நடந்த சம்பவம்!

ஆசையாக காதலி வீட்டிற்கு சென்ற காதலன்..தெரியவந்த உண்மை - அடுத்து நடந்த சம்பவம்!

காதலி 

எனினும் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்ற பிரியதர்ஷினி, தன்னை காதலித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை பர்த்த அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இருமுறை கருகலைப்பு.. காதலனின் திருமணத்தை தடுக்க வந்த காதலி - போலீசார் செய்த சம்பவம்! | Girlfriend Came To Stop Her Boyfriends Marriage

விரைந்து வந்த போலிசார் அப்பெண்ணை சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். ஆனால் பிரியதர்ஷினி வர மறுத்து ஆவேசத்துடன் கேள்விகளை எழுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் பிரியதர்ஷினியை மகளிர் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றினார்கள்.

அப்போது அந்த பெண் வரமறுத்து, என் வாழ்க்கையே போய்விட்டது என்று கதறி அழுதார். அவரிடம் போலீசார், முழுமையாக விசாரிப்போம் என்று கூறினர் . ஆனால் முடியாது என்று அவர் மறுத்துள்ளார்.

இதனால் பிரியதர்ஷினியை வலுக்கட்டாயமாக போலீசார் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கும் அந்த பெண் கத்தி கூச்சலிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.