11 வயதில் கோமா - வடிவேலுவின் காமெடிக்களை பார்த்து மீண்ட சிறுமி!!
நடிகர் வடிவேலு ஈடில்லா காமெடி நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு நாளும் அவரின் எதோ ஒரு காமெடி டைலாக்கை சொல்லலாம் நாம் அந்த தினத்தை கடந்து விட முடியாது.
அந்த அளவிற்கு தனது நகைச்சுவையால் தமிழ் சமுதாயத்தில் இரண்டற கலந்து விட்டார் வடிவேலு. அவர் மீது தனிப்பட்ட முறையில் பலர் பலவிதமான விமர்சனங்களை வைத்தாலும், அவர் ஒரு ஒப்பற்ற நடிகர் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்திருக்காது. அப்படியான வடிவேலுவின் காமெடி ஒரு பெண்ணை கோமாவில் இருந்து விழிக்க செய்துள்ளது.
இது குறித்து வடிவேலுவே பேட்டியில் பேசியுள்ளார். சமீபத்தில் சன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக வடிவேலு பங்கேற்றார். அதனை தொடந்து chef வெங்கடேஷ் பட்டின் நேர்காணலில் வடிவேலு பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் தான் வடிவேலு, இது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். கோமாவில் இருந்த 11 வயது சிறுமியின் டாக்டர் அவரது பெற்றோரிடம் இக்குழந்தைக்கு என்ன ரொம்ப புடிக்கும் என கேட்க, பெற்றோர்கள் அவளுக்கு வடிவேலு காமெடிக்களை விரும்பி பார்ப்பால் என கூறியிருக்கிறார்கள்.
உடனே வடிவேலுவின் காமெடி காட்சிகளை அச்சிறுமிக்கு போட்டுக்காட்ட டாக்டர் அறிவுறுத்த, சுமார் 40'க்கும் மேற்பட்ட காமெடி காட்சிகளை பெற்றோர்கள் சிறுமிக்கு போட்டுக் காட்டி இருக்கிறார்கள்.
அதன் விளைவாக சிறுமி, கோமாவில் இருந்தும் மீண்டு வந்துள்ளார். அதனை தொடர்ந்து சிறுமி மற்றும் அவளது பெற்றோர்கள், வடிவேலுவை நேரில் பார்த்து நன்றியும் தெரிவித்து உள்ளனர்.