மேலாடையை கழட்டுங்க..சோதனையில் அத்துமீறிய அதிகாரிகள் - கதறிய மாணவி!

Bengaluru
By Sumathi Jan 05, 2023 05:38 AM GMT
Report

ஆடையை கழட்ட கூறிய அதிகாரிகள் குறித்து மாணவி வைத்த குற்றச்சாட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சோதனை

BF.7 கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் படி, கர்நாடகா, பெங்களூரில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது.

மேலாடையை கழட்டுங்க..சோதனையில் அத்துமீறிய அதிகாரிகள் - கதறிய மாணவி! | Girl To Remove Shirt In Search Bangalore Airport

அங்கு சோதனையில் மாணவி ஒருவரை மேலாடையை கழற்ற சொல்லி அதிகாரிகள் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கிரிஷானி காத்வி என்ற பெண் பயணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது எனது சட்டையை கழற்றும்படி கேட்டு கொள்ளப்பட்டது.

 மாணவி குற்றச்சாட்டு

ஓரு உள்ளாடையை மட்டுமே அணிந்து கொண்டு பாதுகாப்பு சோதனை பகுதியில் நான் நின்றது உண்மையாகவே அவமதிப்புக்கும், வேதனைக்கும் ஆளாக்கியது. ஒரு பெண்ணாக பலருடைய கவனம் ஈர்க்கும் விதத்தில் நிற்பது என்பது, ஒருபோதும் விரும்பத்தகாத ஒன்று.

ஒரு பெண்ணை ஏன் நீங்கள் ஆடையை கழற்றச் செய்ய வேண்டும்? எனக் குறிப்பிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரு விமான நிலையம் சார்பில் ‘இது நடந்திருக்க கூடாது. இதுகுறித்து எங்கள் செயல் குழுவினருக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கவனித்து வரும் பாதுகாப்பு குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய தொடர்பு எண் மற்றும் பிற விவரத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என பதிலளித்துள்ளது. ஆனால், தற்போது அந்த மாணவியின் பதிவு ட்விட்டர் பக்கத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது.