நாட்டையே உலுக்கிய வழக்கு; நிர்மலா தேவி மோசமான செயல் - நீதிமன்றம் பரபர தீர்ப்பு!

Crime Virudhunagar
By Sumathi Apr 29, 2024 10:03 AM GMT
Report

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் பேரம்

விருதுநகர், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன.

nirmala devi

இதனையடுத்து 2018ல் கைது செய்யப்பட்டார். மேலும், காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில் மாணவிகளிடமும், போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன.

நிர்வாண பூஜைக்கு இளம்பெண்கள் தேவை - 1 லட்சம் பேரம் பேசி சிறுமிகளை சீரழித்த சாமியார்

நிர்வாண பூஜைக்கு இளம்பெண்கள் தேவை - 1 லட்சம் பேரம் பேசி சிறுமிகளை சீரழித்த சாமியார்

நீதிமன்ற தீர்ப்பு

விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

நாட்டையே உலுக்கிய வழக்கு; நிர்மலா தேவி மோசமான செயல் - நீதிமன்றம் பரபர தீர்ப்பு! | Girl Students Case Nirmala Devi Court Verdict

சுமார் ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிர்மலாதேவி முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்தும்,

நிர்மலா தேவியை குற்றவாளி எனவும் தெரிவிக்கப்பட்டது. தண்டனை விவரம் நாளை (ஏப்.30) அறிவிக்கப்பட்டும் எனவும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்துள்ளார்.