பாலியல் தொழில் ஈடுபட்ட பிரபல நடிகைகள் - கையும் களவுமாக பிடித்த போலீசார்
பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரபல நடிகைகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொறி வைத்து பிடித்த போலீசார்
புனே அருகே உள்ள 5 நடசத்திர விடுதியில் இரண்டு நடிகைகள் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதையடுத்து அந்த நட்சத்திர விடுதியில் சோதனை செய்த போது பெண்களை ஏமாற்றி விபச்சார தொழில் செய்த போஜ்புரி நடிகைகள், புரோக்கர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விபச்சார கும்பலை பிடிப்பதற்காக காவல்துறையினர் வாடிக்கையாளர் போல் ஆன்லைன் புரோக்கரை அணுகினர். அப்போது அந்த புரோக்கர் 5 நட்சத்திர ஓட்டலில் அறை முன்பதிவு செய்யுமாறு தெரிவித்தார்.
அவர் சொன்னது போல் அந்த புரோக்கர் போஜ்புரி நடிகைகள் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் இருந்த பெண்களின் புகைப்படங்களை அனுப்பினர்.
மேலும் பெண்களுடன் உல்லாசமாக இருக்க இரவு என்றால் ரூ.25 ஆயிரம் பகல் என்றால் ரூ.15 ஆயிரம் என புரோக்கர் பேரம் பேசியதாக சொல்லப்படுகிறது.
நடிகைகள் மற்றும் புரோக்கர்கள் சிறையில் அடைப்பு
இதனை அடுத்து அங்கு விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த காவல்துறையினர் அதிரடியாக அந்த ஐந்து நடசத்திர விடுதியில் ரெய்டு நடத்தியுள்ளனர்.
அதில் இரண்டு நடிகைகள் மற்றும் புரோக்கர் கைது செய்யப்பட்டனர். மேலும் விபச்சாரத்தில் சிக்கிய அப்பாவி பெண்களை பெண்கள் நல விடுதியில் தங்க வைகப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபச்சாரம் செய்த இரண்டு நடிகைகள், மற்றும் புரோக்கரை சிறையில் அடைத்தனர்.