காதலிக்க மறுத்த இளைஞன் - கூலிக்கு ஆள் வைத்து அடித்த காதலி

Pudukkottai
By Karthikraja Sep 30, 2024 12:00 PM GMT
Report

காதலிக்கு மறுத்த இளைஞனை கூலிக்கு ஆள் வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் பிரிவு

புதுக்கோட்டை, மாயனூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (27), புதுக்கோட்டை பேராங்குளம் அருகே உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை அய்யனார்புரத்தை சேர்ந்த சந்தியாவை (23) காதலித்து வந்துள்ளார். 

புதுக்கோட்டை 

முதலில் காதலுக்கு மறுப்பு தெரிவித்த சந்தியா பின்னர் கார்த்திக்கின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக் சந்தியாவை விட்டு விலகியுள்ளார். 

வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் - கூலிக்கு ஆள் அமர்த்தி ஆசிட் அடிக்க சொன்ன காதலி

வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் - கூலிக்கு ஆள் அமர்த்தி ஆசிட் அடிக்க சொன்ன காதலி

800 ரூபாய்க்கு கூலிப்படை

இதனால் ஆத்திரமடைந்த சந்தியா கார்த்திக்குடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கார்த்திக் காதலிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது உறவு முறை சகோதரரான பத்ம கணபதி (24) என்பவரிடம் இந்த பிரச்சனையை கூறிய சந்தியா, என்னை வேண்டாம் என்று தெரிவித்து சென்ற கார்த்திகை என் கண் முன்னாலே ஆட்களை வைத்து அடிக்க வேண்டும் என்று கூறி அதற்கு பணம் தருவதாக தெரிவித்துள்ளார். 

attack

அதன்படி, ஜிபே மூலமாக முதலில் 500 ரூபாய் பிறகு 300 ரூபாய் என இரண்டு தவணையாக பத்ம கணபதிக்கு சந்தியா பணம் அனுப்பியுள்ளார். அதனையடுத்து, சம்பவ இடத்தில் சந்தியா இருந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று பத்ம கணபதி அவரிடம் தெரிவித்துவிட்டு கார்த்திக் வீட்டுக்கு செல்லும் வழியில் காத்திருந்துள்ளனர்.

தாக்குதல்

கார்த்திக் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அழகாம்பாள்புரம் பகுதியில் வழிமறித்த பத்ம கணபதி மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் 3 பேர் சேர்ந்து கார்த்திக்கை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்த மொபைல் போன், செயின் உள்ளிட்டவற்றை பறித்து சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் முதலில் தன்னை வழிப்பறி செய்ய நினைத்து தாக்கி உள்ளதாக நினைத்ததாகவும், சந்தியாவை வேண்டாம் என்று கூறுவியா?'' என்று கேட்டு அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கார்த்திக்கை தாக்கிய பத்ம கணபதி மற்றும் அவரது நண்பர்களான தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னமணி, கிரிதரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் சந்தியாவின் பெயரையும் சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.