ஸ்மார்ட் போன் மோகம்: ரத்தத்தை விற்க வந்த சிறுமி - பதறிய மருத்துவமனை!
மொபைல் வாங்க தனது ரத்தத்தை விற்க வந்த சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்மார்ட் போன் மோகம்
மேற்கு வங்கம், பலூர்காட் மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது தந்தை காய்கறி வியாபாரி. தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் சிறுமி டியூசன் சென்றுள்ளார். பின் அங்கிருந்து ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு ரத்த வங்கியில், சிறுமி தனது ரத்தத்தை விற்க வேண்டும் என கனாக் குமார் தாஸ் என்பவரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர் சிறார் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே அதிகாரிகள் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.
சிறுமிக்கு அறிவுரை
அதனையடுத்து, சிறுமியின் பெற்றோரை அழைத்து தகவல்களை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், எனது மகள் வீட்டை விட்டு சென்ற போது நான் வீட்டில் இல்லை. ரத்தத்தை விற்றால் பணம் கிடைக்கும் என்ற ஐடியா அவருக்கு எப்படி வந்தது என எனக்கு தெரியவில்லை என்றார்.
தொடர்ந்து, சிறுமி தனது தம்பியின் சிகிச்சைக்காக நான் ரத்தத்தை விற்க வந்ததாக தெரிவித்தார். ஆனால் பின்னர் அவருக்கு புத்திமதி சொன்னதும் தன்னுடைய உறவினரின் செல்போனில் இருந்து ஆன்லைனில் செல்போனை ஆர்டர் செய்ததாகவும்
அதற்கு கேஷ் ஆன் டெலிவரிக்கு பணம் கொடுக்க ரத்தத்தை விற்க வந்ததாகவும் தெரிவித்தார். அதன்பின் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பினர்.