சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் - தொடரும் சோதனைகள்..!
ஈரோட்டு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் இடங்களில் சோதனைகள் தொடரும் என சுகாதார இணை இயக்குனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தகாத உறவு
ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது பெயிண்டர் ஆக வேலை பார்த்துவரும் சையத் அலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்நிலையில் அந்த பெண் கருமுட்டை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கியிருக்கிறார். இந்த சூழலில் அந்தப் பெண்ணின் மகளிடம் தனது கள்ளக்காதன் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டளில் ஈடுபடுவதும், பாலியல் வன்கொடுமை செய்வதும் என இருந்துள்ளார்.
கருமுட்டை விற்பனை
இதற்கு அவருடைய தாயும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. அதோடு மருத்துவமனைக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று கருமுட்டை தானம் செய்ததாக தெரிகிறது.
இதன் மூலம் அந்த பெண்ணிற்கு சுமார் 20 முதல் 30 ஆயிரம் வரையில் பணம் கிடைத்தாகவும் இதற்கு புரோக்கராக செயல்பட்ட பெண்ணிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் அவர்களின் உறவினர்கள் மூலம் வெளியே தெரிவே சிறுமியின் தாய் அவருடைய கள்ளக்காதலன் சையத் அலி மற்றும் புரோக்கராக செயல்பட்ட பெண் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் மருத்துவமனையில் ஆய்வு
சிறுமி அளித்த தகவலின் பேரில் ஈரோடு,சேலம்,பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டதை தொடர்ந்து,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள விஜய் மருத்துவமனையில் கருமுட்டை விற்பனை குறித்து ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டது ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஸ்வநாதன்:
சிறுமி குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் மருத்துவமனைகளில் விசாரித்து ஆவணங்களை பார்த்து வருகிறோம் ஆவணங்கள் பெறப்பட்டு சோதனைக்கு பிறகே உறுதிப்படுத்தப்பட உள்ளது.
சிறுமி 14 வயது முதல் கருமுட்டை விற்பனை செய்தது தெரியவந்திருப்பதால் 3 ஆண்டுகளுக்கான தகவல்கள், விற்பனை குறித்து விசாரித்து வருகிறோம் .
சிறுமி தெரிவித்துள்ளதன் அடிப்படையில் சோதனை தொடரும், பிற மாநிலங்களில் விற்பனை செய்தது குறித்து விசாரிக்கிறோம் என்றார்.
ஆசனவாயில் மின்சாரம் பாய்ச்சிய காவல்துறையினர் - தொடரும் லாக்-அப் கொடூரங்கள்!