பால்பவுடர் கிடைக்காததால்..தாய்ப்பாலை விற்பனை செய்யும் இளம் பெண்..!

United States of America Milk
By Thahir May 17, 2022 01:03 AM GMT
Report

அமெரிக்காவில் பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் தாய்ப்பாலை விற்று வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பல குடும்பங்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட பால் பவுடரையே பிரதான உணவாக கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்நாட்டில் பால் பவுடருக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் பவுடரை தயாரித்து வந்த முன்னணி நிறுவனம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் அமெரிக்காவில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பேபி ஃபார்முலா எனப்படும் பால் பவுடர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

பால்பவுடர் கிடைக்காததால்..தாய்ப்பாலை விற்பனை செய்யும் இளம் பெண்..! | Young Woman Selling Breast Milk America

இதையடுத்து யூடாவை சேர்ந்த அலிசா சிட்டி என்ற பெண் தனது தாய்ப்பாலை (118 லிட்டர்) பல குடும்பங்களுக்கு விற்றுள்ளார்.

இளம் வயதான அவர்,தனக்குச் சுரக்கும் தாய்ப்பாலை கெடாமல் இருப்பதற்காக ஃப்ரீஸரில் வைத்து தேவைபடுவோருக்கு விற்பனை செய்து வருகிறார்.

ஒரு அவுன்ஸ் தாய்ப்பாலை ஒரு அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்வதாக அலிசா சிட்டி கூறியுள்ளார்.