பாதியில் ஓடிய காதலன்; காப்பாற்றியவரை கரம்பிடித்த இளம்பெண் - அப்பாவால் ட்விஸ்ட்!
காதலனுக்காக வீட்டை விட்டு ஓடிய இளம்பெண், வேறொரு நபரை திருமணம் செய்துள்ளார்.
காதலன் எஸ்கேப்
மத்திய பிரதேசம், இந்தூரை சேர்ந்தவர் ஸ்ரத்தா திவாரி. இவர் சர்தக் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதனால் ஸ்ரத்தா தனது வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் இந்தூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். ஆனால் காதலன் வரவில்லை. மேலும்,போனில் தனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் ஆசை இல்லை என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ரயில் நிலையத்தில் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் அங்குள்ள இருக்கையில் அமர்ந்திருந்தபோது ஸ்ரத்தா படித்த கல்லூரியில் எலக்ட்ரீயனாக வேலை செய்யும் கரன் தீப் என்பவர் அவரை பார்த்து சம்பவத்தை அறிந்துள்ளார்.
கடைசியில் ட்விஸ்ட்
இதனையடுத்து அவரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். இதனை ஸ்ரத்தா மறுத்ததால் கரன், நான் வேண்டுமானால் திருமணம் செய்து கொள்கிறேன் என கூற அதனை ஏற்றுள்ளார். அதன்படி இருவரும் திருமணம் செய்து கொண்டு வீடு திரும்பினர்.
இதற்கிடையில், ஸ்ரத்தாவின் தந்தை அனில் திவாரி தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடினார். மகளை பற்றி தகவல் கொடுத்தால் 50 ஆயிரம் சன்மானம் கொடுப்பதாகவும் அறிவித்து இருந்தார். அதோடு தனது மகளின் புகைப்படத்தை வீட்டிற்கு வெளியில் தொங்கவிட்டு
தகவல் கொடுத்தால் 50 ஆயிரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து அனில் கூறுகையில், ''கரனையும், ஸ்ரத்தாவையும் 10 நாட்களுக்கு கண்காணிப்போம்.
அதன் பிறகும் கரனுடன் தான் வாழ்வேன் என்று ஸ்ரத்தா சொன்னால் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.