நான் படிக்கனும்; மணமேடையில் தாலி கட்ட மறுத்த மணப்பெண் - திக்குமுக்காடிய மாப்பிள்ளை!

Viral Video Karnataka Marriage
By Sumathi Dec 09, 2023 07:12 AM GMT
Report

 தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த செயல் கவனம் பெற்றுள்ளது.

திருமணம்

கர்நாடகா, சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் - ஐஸ்வர்யா இடையே திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது.

karnataka

அதன்படி, உறவினர்களை அழைத்து வெகு விமரிசையாக திருமணத்துக்கான ஏற்பாடுகள் திரண்டன. ஆனால், மணமகன் மஞ்சுநாத் தாலி கட்ட முன்வரும்போது, மணமகள் ஐஸ்வர்யா அதனை தடுத்தார்.இதனால் தாலியும் கையுமாக பரிதாபமாக நின்ற மஞ்சுநாத்தை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

தாலியை பிடுங்கிய மணப்பெண்; இப்படி பண்ணிட்டாங்களே.. கதறிய மாப்பிள்ளை!

தாலியை பிடுங்கிய மணப்பெண்; இப்படி பண்ணிட்டாங்களே.. கதறிய மாப்பிள்ளை!

குவியும் பாராட்டு

தொடர்ந்து, போலீஸார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மணமகளின் விருப்பத்துக்கு மாறான அந்த திருமணம் நடத்தப்பட இருந்தது தெரியவந்தது. ஐஸ்வர்யாவின் மேற்படிப்பு ஆசைக்கு தடைபோடாத மாப்பிள்ளை வீட்டார், இறுதியில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், தாலிகட்டும் கடைசி நேரம் வரை மாப்பிள்ளையின் பதிலை எதிர்பார்த்திருந்த ஐஸ்வர்யா, பதில் கிடைக்காத்தால் இந்த செயலை செய்துள்ளார். இதுதொடர்பான, வீடியோ வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. பலர் ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.