கல்யாணத்திற்கு மறுப்பு - பெண்ணை பல துண்டுகளாக வெட்டி வீசிய கொடூரம்!
பெண்ணை கொலை செய்து, நபர் ஒருவர் பல துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமண மறுப்பு
ஜம்மு காஷ்மீர், சோய்பக் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் மாயமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் சகோதரன் தன்வீக் அகமது கான் தங்கையை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அதில், தங்கை கோச்சிங் வகுப்புக்கு சென்று வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், போலீஸார் அந்த பெண்ணின் தொலைபேசி அழைப்புகளை அடிப்படையாக கொண்டு 45 வயதான ஷபீர் அகமது வானி என்பவரை பிடித்தனர். அதன் பின் தான் ஷபீர் அந்த பெண்ணுக்கு அறிமுகமானவர் என்று தெரிய வந்துள்ளது.
கொடூர கொலை
மேலும், விசாரணையில் தச்சு வேலை செய்யும் ஷபீருக்கு அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று பெண்ணின் உறவினர்களிடம் பெண் கேட்டு அனுகியுள்ளார். ஆனால் உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்துள்ளார்.
பின்னர் வீட்டில் சில தச்சு வேலை செய்வதாக வந்து அந்த பெண்ணை சமீபத்தில் பார்த்து கொலை செய்துள்ளார். மேலும் உடலை பல துண்டுகளாக வெட்டி அப்பகுதியில் பல இடங்களில் வீசியுள்ளார். தொடர்ந்து வாக்குமூலத்தின் அடிப்படையில் இறந்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு வருகின்றனர்.