53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...!
மத்தியப் பிரதேசத்தில் 53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 16 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
53 வயதுப் பெண்ணை கொலை செய்த 16 வயது சிறுவன்
மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தில் கொடூரமான முறையில் ஒரு பெண் இறந்து கிடந்தாள். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதைனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 16 வயது சிறுவனை கைது செய்தனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அச்சிறுவன் வாக்குமூலத்தில் பேசுகையில்,
கைலாஷ்புரி கிராமத்தில் கடந்த ஜனவரி 30ம் தேதி இச்சம்பவம் நடந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் போனை திருடியதாக என்னை இப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி என்னை தாக்கினர். இதனால், நான் பழி வாங்க நினைத்தேன்.
இதனையடுத்து கடந்த ஜனவரி 30ம் தேதி ஒரு பிளாஸ்டிக் பை மற்றும் ஒரு துணியை அவளது வாயில் திணித்து கட்டினேன். பின்னர், அவரை பாலியல் பலாத்காரம் செய்தேன்.
இதன பிறகு, கட்டிடத்தின் கட்டுமானப் பகுதிக்கு இழுத்துச் சென்று, தலையிலும் மற்ற உடல் பாகங்களிலும் அரிவாளால் வெட்டினேன். குச்சியால் அந்தரங்க உறுப்புகளை காயப்படுத்தினேன் என்று அதிர்ச்சி வாக்குமூலத்தை கொடுத்தான்.