தாய் உடந்தை... சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - அடுத்தடுத்து நடந்த கொடூரம்!
சிறுமியை காதலன் பாலியல் வன்கொடுமை செய்ததற்கு அவரது தாய் உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மத்தியப் பிரதேசம், ஜரிபட்காவில் காவல்நிலையத்தில் சிறுமி ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நாக்பூரில் உள்ள ஜரிபட்காவைச் சேர்ந்தவர் அந்த சிறுமி.
ஈவண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மே மாதம் போபாலுக்கு வேலை விஷயமாகச் சென்று உள்ளார். அப்போது அபிஷேக் குரில்(22) என்பவரை முதல் முறையாகச் சந்தித்துள்ளார்.
காதலன் தாய் உடந்தை
நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அபிஷேக். மேலும், அவரது தாய் ரஜினி(45) இதற்கு உடந்தையாக இருந்துள்ளார். அதன் பின் அவரும்,
அவரது தாயாரும் இணைந்து அந்த சிறுமியை மற்ற ஆண்கள் உடனும் உறவு கொள்ள வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி தனது புகாரில் தெரிவித்து உள்ளார். மேலும், அந்த சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களையும் அந்த நபர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து குற்றவாளி மீதும் அவரது தாயார் மீதும் போலீசார் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும், அவர்களைக் கைது செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.