ஜாலியாக கிண்டல் செய்த நண்பர் - கோபமடைந்த பெண்ணின் வெறிச்செயலால் நேர்ந்த விபரீதம்!
இளைஞர் கிண்டல் செய்ததால் பெண் கொதிக்கும் பாலை ஊற்றியது அதிர்ச்சி அளித்துள்ளது.
நண்பர் கிண்டல்
சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் 24 வயது இளம்பெண்ணும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பிரபல டீ கடை ஒன்றுக்கு தேனீர் அருந்த சென்றுள்ளனர்.
அப்போது இளைஞர் அந்த பெண்ணை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் டீ கடையில் கொதித்து கொண்டிருந்த பாலை எடுத்து அங்கு நின்றுகொண்டு இருந்த இளைஞர் மீது ஊற்றினார். இதில் வயிறு உள்ளிட்ட பகுதிகள் வெந்துபோன நிலையில் இளைஞர் வலியால் அலறி துடித்து சுருண்டு விழுந்தார்.
நேர்ந்த விபரீதம்
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் இளைஞரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது 2 வாரத்தில் திருமண நடக்க இருப்பதாலும், அந்த பெண் தன்னுடைய உறவுக்கார பெண் என்பதாலும் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று இளைஞர் போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.